கோமாரியில் கோர விபத்து. பலருக்கு பலத்த காயம். உயிரிழப்புக்களும் ஏற்ப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெலிமடையை சேர்ந்தவர்கள் அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்ததுடன் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து சம்பவித்த பேரூந்தில் சுமார் 52 பேர் பயணித்ததாகவும் அவர்கள் ஒரே குடும்பத்து உறவுகள் என தெரிவிக்கப்படுகிறது பாதிக்கப்பட்டவர்கள் பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு அம்பாறை வைவேவ்வியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் சாரதியின் தூக்கக் கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது
இடுகைகள்