விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதவியில் இருந்தபோது அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நேற்று (22.08.2025) கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகரித்ததன் காரணமாக வைத்திய ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
