நல்லூர் தேர்திருவிழாவில் கொழும்பு இளம் அழகிகளின் மோசமான வேலை ஆணின் மர்ம உறுப்பை தாக்கி திருட்டு

 


நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


நல்லூர் ஆலய தேர் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. அதன் போது இளம் யுவதி ஒருவர் , பக்தர்களுக்கு இடையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய வேளை , அதனை அப்பகுதியில் இருந்த சாரணர்கள் அவதானித்து யுவதியை தொடர்ந்து அவதானித்துள்ளனர்.


அதன் போது குறித்த யுவதி ஒரு பெண்ணிடம் சங்கிலி அறுக்க முற்பட்ட வேளை சாரணர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.


பின்னர் அப்பகுதியில் இருந்த பொலிசாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்ட நிலையில் , பொலிஸார் யுவதியை அழைத்து சென்று சோதனை செய்த போது அவரது உடைமையில் இருந்து மூன்று தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளன.


அதனை அடுத்து யுவதியை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , யுவதி கொச்சிக்கடை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் , அவருடன் மேலும் சில நபர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.


அதன் அடிப்படையில் யுவதியுடன் வந்த ஏனையவர்கள் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அத்துடன் யுவதியின் நடவடிக்கைகளை அவதானித்து , யுவதியை கையும் களவுமாக பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கும் பொலிஸார் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


அதேவேளை தேர் திருவிழாவின் போது , தமது தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.


இதேவேளை நல்லுாரில் அன்னதானம் வழங்கிக் கொண்டிருந்த பகுதியி்ல் மக்கள் முண்டியடித்து பார்சலாக வாங்கிக் கொண்டிருந்த போது அந்தக் கூட்டத்துக்குள் இளைஞன் ஒருவனை நெருங்கி வந்த சில பெண்கள் அவனது ஆண் உறுப்பை குறி வைத்து கைப் பையினால் குத்திய போது இளைஞன் வலியால் நிலைகுலைந்து தடுமாறிய தருணத்தில் அவனது 2 பவுண் சங்கிலி களவாடப்பட்டுள்ளது.


 குறித்த இளைஞனை நெருங்கி நின்ற இளம் பெண்கள் சிலரே சங்கிலியை திருடியிரு்க்கலாம் என கருதப்படுகின்றது. 


வலியால் துடிதுடித்து கூட்டத்திலிருந்து வெளியே வந்த இளைஞன் சிறிது நேரத்தின் பின் வலி குறைந்தவுடன் சுதாகரித்து நின்ற போது தனது கழுத்திலிருந்த சங்கிலி களவாடப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதிர்ந்து நின்றதாக பக்தர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post