மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த நபரை, ஒரு கும்பல் அடித்தே கொன்ற கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பீட்டாவாட் குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் கான் (வயது 20), இவர் பொலிஸ் வேலைக்கான தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக ஜாம்னர் நகருக்கு சென்றுள்ளார். விண்ணப்பித்து முடித்த உடன், அருகில் உள்ள கடையில் காபி குடித்தவாறு இளம்பெண் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து, கான் உடன் தகராறு செய்து கொடூரமாக அடித்துள்ளனர்.
அத்தோடு மட்டுமல்லாமல் அவர் வசித்து வந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கட்டை, இரும்புக் கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். கானின் குடும்பத்தினர் தடுக்க முயன்றும் பலனில்லாமல் போனது. இறுதியாக கான் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக புகார் அளித்து, அடித்துக் கொன்றவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல் நிலையத்தை கானின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் 4 பேரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே உள்ள பழைய பகையால் கான் அடித்துக் கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.