மாயமான தமிழ் குடும்பஸ்தர் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த வேலு மருதமுத்து வயது 55 உடையவர் நேற்று காலை 10.57 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை என்று அவரது மகன் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸார் மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தில் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தவர்கள் மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் புரவுன்லோ கரையோர பகுதியில் காணாமல் போன வேலு மருதமுத்து உடுத்தி இருந்த உடை பாதணி என்பவற்றை கண்டு நீர்த்தேக்கத்தில் தேடும் பணியில் மீனவர்கள் மற்றும் புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post