ஆபாச படத்தால் வந்த வினை-உடன் பிறந்த அக்காவை கர்ப்பமாக்கிய தம்பி-பெற்றோர்களே மிகவும் அவதானம்..!

 

இந்தியாவின் கன்னியாகுமரியில் தன் உடன் பிறந்த சகோதரியை கர்ப்பம் ஆக்கிய 16 வயது சிறுவன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 17 வயதில் ஒரு மகளும் 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

 

மகள் 11 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகன் 10 ஆம் வகுப்பு  ஆன்லைன் வகுப்பு படிக்க வேண்டும் என்று கூறி தொலைபேசி ஒன்றை வாங்கி இருக்கிறான் 16 வயது மகன்.

 

ஆரம்பத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தொலைபேசியை பயன்படுத்தி வந்த இந்த சிறுவன் படிப்படியாக சமூக வலைதளங்கள் மற்றும் ஆபாச வலைதளங்களுக்கு சென்று ஆபாச வீடியோக்களை பார்த்து இருக்கிறான்.

 

உடல் நலம் பாதிக்கப்பட்ட தந்தை, மகன் மற்றும் மகள் வீட்டில் இருக்க, தாய் கூலி வேலைக்கு சென்று விட்டு மாலை தான் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

விடுமுறை நாட்களில் அக்கா தம்பி இருவர் மட்டுமே வீட்டில் இருப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் தொலைபேசியில் ஆபாச படங்களை பார்த்து பாதிக்கப்பட்ட இந்த சிறுவன் தன்னுடைய காம இச்சைகளை தன்னுடைய அக்காவிடமே தீர்த்துக் கொண்டிருக்கிறான்.

 

சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தன்னுடைய தாயிடம் அழுது புலம்பி இருக்கிறார். 


உடனே ஆம்புலன்ஸ் வரவைத்து வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சிறுமி. பரிசோதனை செய்த வைத்தியர்கள் சிறுமி எட்டு மாதம் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிவித்துள்ளார்கள்.

 

உடனே பொலிஸாருக்கும் புகார் கொடுத்திருக்கிறார்கள். விரைந்து வந்த பொலிஸார் அந்த சிறுமியிடம் விசாரித்ததில் இந்த அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகி இருக்கின்றன

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post