சென்னை தனியார் கல்லூரியில் பயோமெடிக்கல் இறுதியாண்டு படிக்கும் 20 வயது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் மாணவி, தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்திருந்தபோது, நண்பனாகக் கருதிய மாணவன் அஜய் மற்றும் அவரது சமோசா வியாபாரி நண்பன் ஹரி ஆகியோரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளார். நம்பிக்கையைத் துரோகம் செய்த இந்தச் சம்பவம் தொடர்பில் பச்சுப்பள்ளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, நண்பர்களிடம் உள்ள நம்பிக்கையைப் பற்றியும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. இளம் மாணவி, சென்னை உள்ள ஒரு விடுதியில் தங்கி பயோமெடிக்கல் இறுதியாண்டு படித்து வந்தார். அவருடன் அஜய் என்ற மாணவனும் அதே காலேஜில் படித்து வந்தார். இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காலேஜில் சேர்ந்து சாப்பிடுதல், நோட்ஸ் பகிர்தல், தினசரி தொலைபேசியில் பேசுதல் போன்ற நெருக்கமான உறவு இருந்தது. அஜய், மாணவிக்கு படிப்புச் சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி அளித்து, அவரது குடும்பத்தினரிடமும் நல்ல பெயரைப் பெற்றிருந்தார். இது ஒரு சொந்த ஊர் பிணைப்பாகத் தோன்றியது. இறுதியாண்டு என்பதால், இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக ஹைதராபாத்துக்கு மாணவி மற்றும் அஜய் சென்றனர். கோகட் பள்ளியில் உள்ள ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்த மாணவி, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். மே 3 அன்று, அஜய் தனது சிறு வயது நண்பர் ஹரியின் வீட்டுக்கு "விருந்து" என்று அழைத்துச் சென்றார். ஹரி, நிஜாம்பேட்டையில் சமோசா வியாபாரம் செய்பவர். "என் நண்பரின் சகோதரியைப் போல நடந்துகொள்" என்று அஜய் வற்புறுத்தியதால், மாணவி மறுக்க முடியாமல் அங்கு சென்றார். ஹரியின் வீட்டில் வெயிலின் கோரத்தில் குளிர்பானம் (கோல்ட் ட்ரிங்க்ஸ்) குடிக்கச் சொல்லியிருந்தார். "அண்ணன் வீட்டில் குடிக்கக் கூடாது" என்று மாணவி மறுத்தாலும், அஜயின் வற்புறுத்தலால் அவர் குடித்தார். ஆனால், அந்தப் பானத்தில் மது கலந்திருந்தது.
சில நிமிடங்களில் மயங்கிய மாணவி, தன்னிலை மறந்து விழுந்தார். அதைப் பயன்படுத்தி, அஜய் மற்றும் ஹரி மாறி மாறி அவரைப் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர், மாணவியை அப்படியே அறையில் விட்டுவிட்டு, இருவரும் ஊருக்குச் சென்றுவிட்டனர்.போதை தெளிந்து எழுந்த மாணவி, தனது உடலில் உடைகள் இல்லாததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். "நான் ஏன் பெட்ரூமில் இப்படி படுத்திருக்கிறேன்?" என்று யோசித்தபோது, நண்பன் அஜயின் பெயரை அழைத்து கூப்பிட்டார். ஆனால், அஜயும் ஹரியும் அங்கு இல்லை. அதிர்ச்சியுடன் தனது உடைகளை அணிந்து, பச்சுப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு சென்று கதறி அழுதபடி நடந்தவற்றை விவரித்தார். அப்போதுதான் பொலிஸாருக்கு முழு விவரம் தெரிந்தது. முறைப்பாட்டின் படி, பொலிஸார் அஜய் மற்றும் ஹரியைத் தேடி அவர்களை கைது செய்தனர். இருவரும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டனர். அனுப்பப்பட்டுள்ளனர். பச்சுப்பள்ளி பொலிஸ் பரிசோதகர் ஜே. உபேந்தர் ராவ், "மாணவி ஹைதராபாத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இன்டர்ன்ஷிப் செய்ய வந்திருந்தார். நண்பரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி இந்தச் சதி செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், நண்பர்களிடம் உள்ள நம்பிக்கையைப் பற்றி பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. சமூக ஆர்வலர்கள், "இன்றைய காலத்தில், உயிர் நண்பர்களாக இருந்தாலும், தனியாக வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெண்கள் உஷாராக இருந்தால் மட்டுமே இத்தகைய விபரீதங்களைத் தவிர்க்க முடியும்" என்று அறிவுறுத்துகின்றனர்
