முல்லைத்தீவை உறைய வைத்த விபத்து-இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்..!
உடையார்கட்டு வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி! முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியில் வெள்ளப்பள்ளம் சந்தியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் குரவில் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்இந்த சம்பவம் நேற்று 20.09.2025 இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வெள்ளப்பள்ளம் வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு பரந்தன் முதன்மை வீதியினை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று பரந்தன் பக்கம் இருந்து புதுக்குடியிருப்பு பக்கம் நோக்கி வேகமாக பயணித்த உந்துருளி மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வேகமாக உந்துருயில் பயணித்த 26 அகவையுடைய உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் மூங்கிலாறு பிரதேச மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார்கட்டு,சுதந்திரபுரம்,மூங்கிலாறு, பகுதிகளில் அண்மை காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
