ஜனாதிபதி சற்றுமுன் அதிரடி அறிவிப்பு..!
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம் தயக்கமின்றி செயற்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற ஆடைத் துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினர்களுடன் 2026 வரவுசெலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்றபோது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். தற்போதுள்ள கைத்தொழில்களுக்கு வசதிகளை வழங்குவதன் மூலம் முதல் சுற்றில் எதிர்பார்க்கும் முன்னேற்ற இலக்குகளை அடைய ஒரு அணுகுமுறையொன்றை எட்ட முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு ரூபாயையும் அதிக பலன் கிடைக்கும் முதலீடுகளுக்குப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.
