ஹல்துமுல்லயில் நிலநடுக்கம்! பதுளை மாவட்ட ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட பல இடங்களில் நேற்று மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. நேற்று மாலை 6.46 மற்றும் 6.47 மணிக்கு ஹல்துமுல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வெலன்விட்ட, அக்கரசிய, லெமஸ்தோட்ட, முருதஹின்ன உட்பட பலபகுதிகளில் இவ்வாறு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டுது. பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளதுடன், இந்த நிலநடுக்கத்தின் போது எவ்வித சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. இந்த திடீர் நிலநடுக்கம் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
