யாழில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியை சேர்ந்த கவிநாத் பூஜிதா என்ற தம்பதிகளின் முதல் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. இவ்வாறு பிறந்த குழந்தை நேற்றையதினம் (11) திடீரென உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
