சற்றுமுன் மீண்டும் மற்றுமொரு நாட்டில் கடுமையான நிலநடுக்கம் வெளியான அவசர சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று(19.09.2025) அதிகாலை 7.8 ரிக்டர் அளவிலும் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்திலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. எனினும், அதைத் தொடர்ந்து 5.8 ரிக்டர் அளவு வரை தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
