நுவரெலியாவில் இன்று காலை நேருக்கு நேர் மோதிய பேரூந்தும் பொலிரோ வண்டியும் இன்று (20) நுவரெலியா ராகலா பிரதான வீதியால் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்குச் சொந்தமான பேரூந்தும் பொலிரோ ரக வண்டியும் ராகல புரூக்சைட் சந்திக்கு அருகில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டநிலையில் பொலிரோ ரக வாகனம் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தின் போது பொலிரோ வண்டியை செலுத்திச் சென்ற சாரதி பலத்த காயமடைந்ததுடன் பேரூந்தின் சாரதியும் சிறு காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

