சிக்கன் கேட்ட 7 வயது மகனை பூரிக்கட்டையால் அடித்துக் கொலை செய்த தாய் - மகாராஷ்டிராவில் சம்பவம்
சிக்கன் கேட்ட மகனை பூரிக்கட்டையால் அடித்துக் கொலைச் செய்த தாயின் கோரச் செயல் இணையவாசிகளால் பெரிதும் பேசப்படுகிறது
இந்தியா மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய அம்மாவிடம் கோழிக்கறி வேண்டும் என கேட்கிறார்.
இதனால் கோபமடைந்த சிறுவனின் தாயார் சிறுவனை பூரிக்கட்டையால் அடித்துக் கொலைச் செய்துள்ளார்.
இந்த அடியால் சிறுவனின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காயம் ஏற்பட்டும் தாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத காரணத்தினால் சிறுவன் அடிப்பட்ட அன்று இரவு வீட்டிலேயே இறந்துவிடுகிறார்.
இந்த நிலையில், சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறுவனை ரொட்டி உருட்டும் கட்டையால் அடித்த ஆதாரங்கள் காவல்துறையினர் கையில் சிக்கியுள்ளது.
இறந்த சிறுவனுக்கு 10 வயது சகோதரி ஒருவரும் இருக்கிறார். அவரும் பயத்தில் இருந்ததை கவனித்த காவல்துறையினர் பாதுகாப்பாக ஆசிரமத்திற்கு அனுப்பியுள்ளனர்.
தவறை தாய் ஒப்பு கொண்ட பின்னரும் அந்த பகுதியில் உள்ள மக்கள், “இதற்கு வேறு காரணம் இருக்கலாம்..” என கருத்துக்களை பதவிட்டு வருகிறார்கள்.
