மோட்டார் சைக்கிளில் சிறுபிள்ளை உட்பட நால்வர் பயணித்ததால் கட்டுப்பாட்டை இழந்து மின்விளக்கு கம்பத்துடன் விபத்து. மனிதர்களிடம் அற்றுப்போன மனிதாபிமானம் வீதியால் வந்த வேளை மோதுண்டு இரத்தம் ஓட கிடந்த சிறு பிள்ளையை தூக்கியபடி யாரும் வாகனத்தில் ஏற்றகேட்க ஏற்றாததால் ஒருவர் எனது மோட்டர் சைக்கிளை எடுங்கள் பூநகரி வைத்தியசாலை பிள்ளையை கொண்டு போக என்று கேட்க எவரும் தயாரில்லை. (அம்புலன்ஸ் குறித்த இடத்திற்கு வர 40நிமிடமாவது தேவை) சுற்றி நின்றவர்களிடமிருந்து இது தேவையற்ற பிரச்சினை என்ற பதில் தான் ஒரு உயிரை விட ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதால் பெரிய பிரச்சினை வரப்போவதில்லை. இறுதியில் வந்த ஒரு இளைஞன் மோட்டார் சைக்கிளை ஸ்ராட் பண்ண தெய்வாதினமாக Dr சத்தியமூர்த்தி அவர்களும் அவ்வழியே வந்தார் பிள்ளையை காரில் வைத்து முதலுதவி கொடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. எனினும் தலை பிடரியில் பலமாக அடிபட்டிருந்ததால் வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்கவில்லை. சிறு பிள்ளை உயிருடன் இல்லை. பிள்ளையுடன் நால்வராக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள். விபத்துக்குள்ளானவர்களை தூக்கினால் பிரச்சினை வரும் என எண்ணும் மனம் கொண்ட மனிதர்கள். ஒரு மனித உயிர் எம்மால் காப்பாற்ற முடியவில்லை என்பதை விட ஒரு உயிரை காப்பாற்றியதால் என்னதான் பிரச்சினை வரப்போகிறது. ஒரு மனித உயிரைவிட ஒருவரை காப்பாற்றினால் ஏதும் பிரச்சினை வரும் என அஞ்சுவதா ? விபத்து வேளையில் ஓர் உயிரை காப்பாற்ற என் தமிழினம் அச்சம் கொள்கிறதா? மனிதர்கள் மனிதாபிமானமற்று மந்தியாக ஏன் சிந்திக்கிறார்கள்.... ஒரு மனித உயிரும் பிரச்சினையும் சமனா அப்படி என்ன பிரச்சினை வரப்போகுது மிஞ்சி போனால் விபத்தை பார்த்ததற்கான ஒரு வாக்கு மூலம் அதை விட ஒன்றும் இல்லை. யாரும் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி கிடந்தால் வேடிக்கை பார்க்காதீர்கள்.
