பாடசாலை தவணை அட்டவணை - 2026-மற்றும் விடுமுறை 2026 ம் ஆண்டில் பின்பற்ற வேண்டிய பாடசாலைத் தவணை அட்டவணை மற்றும் உரிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 1. சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு முதலாம் தவணை முதலாம் கட்டம் தவணை நடைபெறும் காலப் பகுதி 2026.01.01 வியாழன் முதல் 2026.02.13 வெள்ளி வரை (2026.02.14 ம் திகதி முதல் 2026.03.02 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்) இரண்டாம் கட்டம் 2026.03.03 செவ்வாய் முதல் 2026.04.10 வெள்ளி வரை (2026.04.11 ம் திகதி முதல் 2026.04.19 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்) இரண்டாம் தவணை 2026.04.20 திங்கள் முதல் 2026.07.24 வெள்ளி வரை மூன்றாம் தவணை முதலாம் கட்டம் 2026.07.27 திங்கள் முதல் 2026.08.07 வெள்ளி வரை (20256.08.08 ம் திகதி முதல் 2026.09.06 ம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்படும்) இரண்டாம் கட்டம் 2026.09.07 திங்கள் முதல் 2026.12.04 வெள்ளி வரை அவ் அம் மாகாணக் கல்வி அமைச்சுக்கள் தத்தமது மாகாணங்களுக்கு விசேடமான நிலைமைகளுக்கு அமைவாக பாடசாலை தவணை அட்டவணையில் மாற்றங்களை செய்ய உத்தேசிப்பின், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குட்பட்டும். 1997 ஆகஸ்ட் மாதம் 08ம் திகதியுடைய கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளரின் இலக்கம் 97/15 உடைய சுற்றுநிருபத்திற்கமைய இந்த தவணை அட்டவணையில் மாற்றங்களை செய்ய முடியும். பாடசாலை தவணை அட்டவணை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 1997 ஆகஸ்ட் மாதம் 08ம் திகதியுடைய கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளரின் இலக்கம் 97/15 உடைய சுற்றுநிருபத்திற்கமைய அனைத்துப் பாடசாலைகளும் ஒரு வருடத்தில் 210 நாட்கள் நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதுடன், 2026ம் ஆண்டில் வரும் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் பாடசாலைப் பரீட்சை நாட்களுக்கமைய 210 நாட்கள் பாடசாலை நடாத்த முடியாதுள்ளது. ஆகையால், 2026 ம் ஆண்டில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் அனுமதி பெற்ற பிரிவெனாக்கள் 197 நாட்கள் பாடசாலை நடாத்த வேண்டும். 2026ம் ஆண்டிற்கான க.பொ.த (உத) பரீட்சை ஆகஸ்ட் மாதத்திலும் 2025 (2026) க.பொ.த (சாதாரண தர) பரீட்சை பெப்ரவரி மாதத்திலும் 2026 - க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடாத்தப்படவுள்ளதால், பாடசாலை விடுமுறைக் காலம் தவணை அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வழங்கப்படல் வேண்டும். அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொது விடுமுறை தினங்கள். ஞாயிற்றுக் கிழமை நாட்கள் மற்றும் தவணை விடுமுறை காலங்களில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும். இருப்பினும் விசேடமான காரணம் ஒன்றிற்காக பாடசாலை நடாத்தப்பட வேண்டிய தினம் ஒன்றில் பாடசாலையை மூடுவதற்கு நேரிடும் பட்சத்தில் அத் தினத்திற்குப் பதிலாக வேறு தினமொன்றில் பாடசாலை நடாத்தப்படல் வேண்டும். 04.2026ம் ஆண்டிற்குரிய அரசாங்க விடுமுறை நாட்காட்டி இத்துடன் தங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதுடன் (இணைப்பு-I), பாடசாலை செயற்பாடுகள் உள்ளடங்கிய நாட்காட்டி இவ் அமைச்சின் இணையத் தளத்தில் (www.moe.gov.lk) பிரசுரிக்கப்படும். இந்த தவணை அட்டவணையை நடைமுறைப்படுத்தும் போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படின் அது தொடர்பில் பாடசாலை செயற்பாடுகள் கிளையின் கல்விப் பணிப்பாளரிடம் விசாரிக்குமாறு தயவுடன் அறியத் தருகின்றேன். தொலைபேசி இலக்கம் -011-2784845