கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அமைதியான கிராமத்தில், நூற்றாண்டுகள் பழமையான மரங்களின் நிழலில் அமைந்திருக்கும் அந்த உயர்நிலைப் பள்ளி. அங்கு, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மாணவர்கள், காற்றில் மிதக்கும் இலைகளின் மெல்லிய சத்தத்துடன் படிப்பை உறிஞ்சிக் கொள்கிறார்கள்.
அந்தப் புனித இடம், ஒளியின் கதவாகத் திகழ்ந்து வந்தது. ஆசிரியர்கள் என்ற போர்வையில் அந்த மூன்று மிருகங்கள் அதன் சுவர்களை மாசுபடுத்தும் வரை.
அது ஒரு சாதாரண காலை; மாணவர்கள் வகுப்பறைகளுக்குச் செல்கிறார்கள். ஆனால், அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் அறையில், மூன்று மிருகங்கள், மோகன், ராஜேஷ் மற்றும் ஜெபராஜ் ஆகியோர் தங்கள் வலையை விரிக்கத் தொடங்கியிருந்தனர்.
அவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் என்று பாடங்களின் போர்வையில், 11ஆம் வகுப்பின் இளம் புதுமஞ்சள் போன்ற மாணவிகளை இலக்காகத் தேர்ந்தெடுத்தனர்.
அது தொடங்கியது சிறு சிறு சதிகளில் தான். ஜெபராஜ்.. கிளாஸ்க்கு போறியா.. நாங்க ரெண்டு பேரும் இங்கே இருக்கோம்.. நீ போய் ஸ்டெல்லாவை இங்க அனுப்பி விடு.. என்றான் மோகன். வகுப்புக்கு சென்ற ஜெபராஜ் "இந்த நோட்டை எடுத்துக்கோ" ஸ்டாஃப் ரூம்ல மோகன் சர் கிட்ட ஒரு சைன் வாங்கிட்டு வா.. என்று மாணவி ஸ்டெல்லாவை அழைத்து, ஸ்டாஃப் ரூமுக்கு அனுப்பினான் ஜெபராஜ்.
ஆசிரியர்களின் அறைக்கு வந்த ஸ்டெல்லா.. சைன் வாங்கிட்டு வர சொன்னாரு சார்.. என்று நெழிய.. "என்ன அவசரம்? இரு, நான் தான் உன்னை அனுப்ப சொன்னேன்.." என்று சிரித்தபடி, படிப்புக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை எறிந்தனர் மோகனும், ராஜேஷும்.. கடலை போடுவது, தொடர்புகளைப் பின்னிப்பிணைப்பது. அவர்கள் எந்த மாணவி எப்படி என்று துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர்.
அந்த வலையில் சிக்கினவர்கள் ஐந்து இளம் பூக்கள்: பிரியா, பூஜிதா, ஸ்டெல்லா, சஹானா, வர்ஷினி. அவர்கள் தகாத தொடர்புகளில் சிக்கி, பள்ளியில் ராணிகளாக மாறினர். சக மாணவர்கள் அந்த ஐவரையும் பார்த்து அஞ்சினர் – "இவர்களைப் பகைத்தால், ஆசிரியர்கள் தொந்தரவு கொடுப்பார்கள்" என்ற பயம் பரவியது.
அந்த ஐந்து மாணவிகளும் அதை ரசித்தனர்; "நாங்கள் தான் இங்கே எல்லாம்.. என்ற மமதை" உணர்வில் சுதந்திரமாகத் திரிந்தனர்.ஆனால், இருளின் நிழல்கள் அவர்களை தீண்ட வந்து கொண்டிருப்பதை அவர்கள் உணரவில்லை.
ஆசிரியர்கள், மாணவிகள் இடையே எழுந்த இந்த தொடர்புகள் பள்ளியின் சுவர்களைத் தாண்டி, வெளியுலகத்துக்குச் சென்றன. விடுமுறை நாட்களில், இனோவா காரில் ஐந்து மாணவிகளையும் அழைத்துக்கொண்டு, அருகிலுள்ள தியேட்டர்கள், பார்க்குகள், கோயில்கள், சுற்றுலா இடங்களுக்குச் சென்று மகிழ்ந்தனர் அந்த மூன்று பசுத்தோல் போர்த்திய புலிகள்.
இளம் பயிர்களை மாறி மாறி மேய்ந்தனர். ஆனால், ஒரு நாள், அந்த வலையின் கொடூர விளைவு வெளிப்பட்டது. ஒரு மாணவியின் தொலைபேசியில் ஒரு காட்சியை பார்த்து சக மாணவி அதிர்ந்து போனார்.
ஆசிரியரின் மடியில் அமர்ந்து, தோள் மேல் கை போட்டுக்கொண்டு செல்ஃபி எடுக்கும் புகைப்படம். அது பள்ளி முழுதும் பரவியது; வார்த்தைகள் மெல்ல மெல்ல வெளியே வந்தன. உஷாரான ஐந்து மாணவிகளும் கூடி, "இனி தொடர்பு வேண்டாம்" என்று முடிவு செய்தனர்.
ஆசிரியர்களைப் புறக்கணிக்கத் தொடங்கினர். ஆனால், அது அவர்களின் முடிவல்ல. பள்ளியின் கழிவறையில், அட்டகாசம் தொடர்ந்தது. "சரி, பள்ளியில் சந்திக்க வேண்டாம், வெளியில் சந்திப்போம்" என்று மனதைக் கலைத்தனர். அந்த அச்சம், அந்தப் பயம் – அது ஒரு புயலாக மாறியது.
ஒரு நாள், தொலைக்காட்சிகளில் வந்த செய்தி நாட்டு மக்களை அதிர வைத்தது. "11ஆம் வகுப்பு மாணவி கர்ப்பம் – காரணம், மூன்று ஆசிரியர்கள்!" என்று படபடக்கும் பின்னணி இசையுடன் வெளியான செய்தியால் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகள்.
பெற்றோர்களின் வயிற்றில் நெருப்பு. "என்ன நடக்கிறது பள்ளிகளில்?" என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், அந்த மாணவியின் பெற்றோர்கள் குரல் கொடுக்கவில்லை. "போராட்டம் வேண்டாம், விவாதம் வேண்டாம். இது எங்களின் மகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும். ரகசியமாக முடித்துக்கொள்வோம். ஆசிரியர்களுக்கு தண்டனை போதும்" என்று வேண்டுகோள்.
அந்தப் பெரும் கூட்டம் கையை தூக்கி ஆதரவு தெரிவித்தது. ஆனால், பெற்றோர்கள் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லி போராட்டமெல்லாம் வேணாம்ங்க என்று அழுதனர். கேமராக்கள் பதிவு செய்தாலும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு செய்யவில்லை அவர்களின் மகள்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க.
மறுபக்கம், அந்தச் செய்தி மெல்ல மறைந்தது. "பெண் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும், அவர்களை வீட்டில் பூட்டிவைப்பார்கள்" என்ற அச்சம். இப்போதுதான் பெண்கள் அதிகம் படிக்கத் தொடங்கியிருக்கிறோம், இது அவர்களின் கனவுகளைப் பாழாக்கும் என்று விவாதங்கள் எழுந்தன.
ஆனால், விசாரணையின் இருளில், உண்மை வெளியே வந்தது. அந்த மூன்று ஆசிரியர்களின் வெளியுலக சுற்றுகள் – காரில் அழைத்துச் சென்று, பொழுதுபோக்கு இடங்களில் அட்டகாசம். அது தெரிந்ததும், பணி இடைநீக்கம். இப்போது, நிரந்தர நீக்கம் செய்ய வேலைகள் நடக்கிறது. ஆனால், ஊர் மக்கள் போதுமானதாக நினைக்கவில்லை.
"இந்தக் கொடுமைக்கு வேலை இழப்பு போதாது. ஆயுள் சிறை! கடுமையான தண்டனை!" என்ற கோரிக்கைகள் இன்னும் கொழுந்து விட்டுப் பற்றி எரிகின்றன.
அந்தப் புனித பள்ளியின் சுவர்கள் இப்போது அமைதியாகின்றன. ஆனால், அந்த ஐந்து மாணவிகளின் கண்களில், பயமும் வலியும் இன்னும் நிழலிடுகின்றன. ஒரு பிரபல வழக்கறிஞர், மாணவிக்கு ஆதரவாக வாதாடுகிறார். நியாயம் கிடைக்கும் என்று நம்பலாம்.
ஏனெனில், கொடூர இரவாக இருந்தாலும், சிறு வெளிச்சம் அந்த இரவின் இருட்டை கலைத்து விடும்.
இந்தக் கதை, ஒரு எச்சரிக்கை: பள்ளிகள் பாதுகாப்பின் கோட்டை ஆகும். அது உடைந்தால், எதிர்காலம் உடைந்துவிடும்.
