விசாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரம், அலைகள் அசைந்து கொண்டிருக்கும் அந்த சிறிய வீட்டில், நாகேந்திராவும் அகிலாவும் தங்கள் கனவுகளை பின்தொடர்ந்தனர். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞன் நாகேந்திரா, பல ஆண்டுகளாக அகிலாவை காதலித்தான்.
உறவினர்களின் கடும் எதிர்ப்பை மீறி, அவர்கள் அக்டோபர் 28 அன்று திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு வெறும் ஆறு மாதங்களே ஆகியிருந்தது. நாகேந்திரா, தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்தில் குடியேறி, மீன்பிடி தொழிலில் ஈடுபட்டான்.
அகிலாவுடன் அந்த கடல் மணல் சூழ்ந்த வாழ்க்கை, அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.ஆனால், வாழ்க்கை எப்போதும் அழகான கதையாகத் தொடரவில்லை.
கடுமையான பொருளாதார நெருக்கடி அவர்களைத் தாக்கியது. கடல் அலைவுகள் காரணமாக மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. வீட்டு செலவுகளை ஈடுசெய்ய, நாகேந்திரா தனது போனில் ஒரு லோன் ஆப்பை இன்ஸ்டால் செய்தான். வெறும் 2000 ரூபாய் கடன் – அது அப்போதைக்கு போதுமென்று நினைத்தான்.
அவன் அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினான். ஆனால், அந்த 2000 ரூபாய் அவர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது.கடன் திருப்பிச் செலுத்த சில நாட்கள் தாமதமானது. அப்போதும், கடன் நிறுவனத்தின் முகவர்கள் நாகேந்திராவைத் தொடர்ந்து அழைத்தனர்.
அவர்கள் அவனைத் திட்டி, அவமானப்படுத்தினர். உச்சக்கட்டமாக, அவர்களின் கைகளில் வந்த அகிலாவின் போட்டோக்களை – அது தம்பதியரின் தனிப்பட்ட நினைவுகள் – அவர்கள் ஆபாசமாக எடிட் செய்தனர். அந்தரங்க பாகங்களை ஜூம் செய்து, விஷமமான படங்களை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரப்பினர்.
சில நாட்களுக்குப் பிறகு, நாகேந்திராவின் உறவினர்களுக்கும் அனுப்பினர். "இந்தப் பெண்ணின் விலை என்ன?" என்று அவமானகரமான செய்திகளுடன்.அந்தப் படங்கள் நாகேந்திராவின் உறவினர்களிடம் வந்ததும், அவர்கள் அவனை அழைத்தனர்."உன் மனைவியின் ஆபாசப் படங்கள் எங்களுக்கு வந்திருக்கு! இதுக்கு என்ன காரணம்?" என்று கேட்டு, அவனை நச்சரித்தனர். நாகேந்திரா உடைந்து போனான். சமூக வலைதளங்களில், அந்தப் பெண்ணின் பெயராக "அகிலா" என்று போடப்பட்டது.
"அகிலாவின் விலை இவ்வளவு தான்.. இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்" என்று அவரது போன் எண்ணைப் பதிவிட்டனர் லோன் ஆப் கயவர்கள். இதனை பார்த்த, சமூக வலைதள சமூக விரோதிகள் அகிலா வேண்டும் என தொடர்ந்து அழைத்தனர். "அகிலா இருக்காங்களா? எவ்வளவு விலை?" என்று சபலமான வார்த்தைகளால் அவனை புழு போல துடிக்க செய்தனர்.
ஆசையுடன் காதலித்து, திருமணம் செய்து கொண்ட மனைவியின் அந்தரங்கங்கள் பொதுவெளியில் பரவியது, நாகேந்திராவை தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அவன் தூங்காமல், உணவு உட்காமல் துடித்தான். அந்த கொடுமைகளைச் சகிக்க முடியாமல், ஒரு இரவில் தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக் கொண்டான்.
டிசம்பர் 7 அன்று, அந்த சிறிய வீட்டில் அவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தூக்கில் பிணமாக தொங்கும் தன் கணவரைப் பார்த்து, அகிலா அதிர்ந்து போனாள். அவள் உடனடியாக மகாராணிபேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள்.
தங்களுக்கு நடந்த கொடுமைகளை விவரித்து, "என்னுடைய கணவரின் மறைவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று போராடுகிறாள். காவல்துறை, பிரிவு 108 (தற்கொலைத் தூண்டுதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம், இந்தியாவில் பரவும் சட்டவிரோத லோன் ஆப்புகளின் அட்டூழியத்தை மீண்டும் வெளிச்சம் போட்டுள்ளது.
இந்தக் கதை, வெறும் 2000 ரூபாய்க்காக இழக்கப்பட்ட ஒரு உயிரின் வலியை சொல்லுகிறது. லோன் ஆப்புகள், ஏழை மக்களை இலக்காகக் கொண்டு, அவர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடி, அவமானப்படுத்தி, உயிர்களை அழிக்கின்றன.
நாகேந்திராவின் மரணம், அரசுக்கு எச்சரிக்கை – இந்த கொடுமைகளுக்கு விரைவான தீர்வு தேவை. அகிலாவின் போராட்டம், அந்த நியாயத்திற்கான ஒளியாகத் திகழட்டும்.