கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை அருகே, மூலச்சல் என்ற சிறிய கிராமத்தின் அமைதியான வீதிகளில், ஒரு காதல் கதை தொடங்கியது. 14 ஆண்டுகளுக்கு முன்பு, அழகியமண்டபத்தின் சாலைகளில் டெம்போவை ஓட்டும் இளைஞன் எபனேசர், அவரது வாலிப வயதில் ஒரு அழகின் நிழலில் சிக்கினான்.
அந்த அழகு, ஜெபபிரின்ஸா. 18 வயதான அவள், கிராமத்தின் மெல்லிய புன்னகையரசி. பெற்றோரின் கடுமையான எதிர்ப்பை மீறி, அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அந்த திருமணம், கிராமத்தில் ஒரு ரொமான்ட்டிக் கச்சேரி போல ஆரம்பித்தது.
இருவருக்கும் இரண்டு மகன்கள் பிறந்தனர் – ஒரு சிறிய குடும்பம், காதலின் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. ஆனால், காதல்கள் போலவே, இந்தக் கதையும் மெல்ல மாற்றங்களைச் சந்தித்தது. கருத்து வேறுபாடுகள், சிறிய சச்சரவுகள், பெரிய பிளவுகளாக விரிந்தன.ஜெபபிரின்ஸா, தன் இரு சிறு மகன்களுடன் தாய்வீட்டிற்குத் திரும்பினாள். எபனேசரின் இதயத்தில், அந்தப் பிரிவு ஒரு காயமாக மாறியது. அது காயமாகவே இருந்திருக்கலாம் – ஆனால், அது விஷமாக மாறியது.
ஒரு சாதாரண நாள், ஜெபபிரின்ஸாவின் வீட்டில் ஒரு சிறிய நிகழ்ச்சி. கிராம மக்கள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அந்தச் சிரிப்புகளுக்கு நடுவே, எபனேசர் வந்தான். அவனது கண்களில், காதலின் எச்சங்கள் இன்னும் துடித்தன.
வாமா.., பேசலாம்," என்று மென்மையாக அழைத்தான். ஜெபபிரின்ஸா, அவனது இருசக்கர வாகனத்தில் ஏறினாள். அந்தப் பயணம், அவர்களின் கடைசி பயணமாக மாறியது.
ஜெபபிரின்ஸாவின் உயிர் அணைந்தது. அவளது உடல், கோபம் கலந்த காதலின் இரத்தத்தில் நனைந்தது. கிராமம் அதிர்ந்தது. பிரின்ஸாவை கொன்னுட்டாங்க.. ஊரெங்கும் இதே தான் பேச்சு. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும், அந்தச் சம்பவம் பரபரப்பின் தீயாகப் பரவியது.
அப்போ, எபனேசர்? அவன் தப்பி ஓடவில்லை. அவன் தன் காதலியின் இரத்தத்தில் தானும் நனைய விரும்பினான். கையில் வைத்திருந்த, விஷத்தை வாயில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றான். போலீசார் அவனைக் கண்டுபிடித்தபோது, அவன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தான்.
அவளது மாற்றங்கள் – அதிக மேக்கப், டைட் ஜீன்ஸ், டீ-ஷர்ட் – அவனுக்கு விரும்பத்தகாதவையாகத் தோன்றின. "ஆண் நண்பர்களுடன் டேட்டிங்... பீச், பார்க்... இரவு தாமதமாக வீடு திரும்புது.
"அரிவாளை மறைத்துவைத்து சென்றேன். நைசா பேசி அழைத்துச் சென்றேன். பின்னர்... வெட்டினேன்." அவன் கொலை செய்தான். தன் வாழ்வையும் முடிக்க முயன்றான்.இந்தக் கதையின் முடிவில், ஒரு 11 பக்கக் கடிதமும், ஜெபபிரின்ஸா குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.




