சற்று முன் பற்றி எரிந்த ஆடைத்தொழிற்சாலை 16 பேர் உடல் கருகி பலி

 


பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். டாக்காவின் மிர்பூர் பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் இயங்கிவந்த குறித்த ஆடைத் தொழிற்சாலையில் இன்று தீப்பரவல் ஏற்பட்டது. மூன்று மணி நேர முயற்சியின் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், அதற்கு அருகிலிருந்த இரசாயனக் களஞ்சியத்தில் தீப்பரவல் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள போதிலும் அவை அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியுள்ளன என தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. அருகில் இருந்த இரசாயனக் களஞ்சியத்தில் பிளாஸ்டிக் மற்றும் ஹைட்ரஜன் பெரோக்சைட்டு போன்ற தீயை தீவிரமாக்கும் பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post