அம்பாறை – வீரகொட பகுதியில் நேற்று (30.10.2025) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீரகொடவிலிருந்து ருகுணுகம நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உஹன, திஸ்ஸபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடையவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய முகாம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
