வங்காள விரிகுடாவில் நாளைய தினம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட தாழமுக்கம் இன்று உருவாகியுள்ளது ( இன்று காலை 9.00 -11. 30 மணி). இது நாளை இரவு (21.10.2025) அல்லது நாளை மறுநாள் (22.10.2025) மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, தமிழ்நாட்டின் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தாழமுக்கம் நகரும்போது எமது கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் கடற்பகுதிகளை அண்மித்தே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை நாளை இன்று முதல் செறிவடைந்து 24.10.2025 வரை தொடரும். இன்று முதல் எதிர்வரும் 24.10.2025 வரை கிழக்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அதே வேளை எதிர்வரும் 30.10.2025 வரை பரவலாக பருவ மழை கிடைக்கும்.
அத்தோடு எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு தாழமுக்கமும் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு