யா / வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி ஆசிரியர் தீடிரென உயிரிழப்பு ! அல்வாய் கிழக்கு பெரியார் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது , கடந்த ஒரு மாதமாக சுகயீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் , இரண்டு சிறு நீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். நீண்டகாலமாக ஆசிரியர் சேவையில் பணிபுரிந்து வந்த குறித்த ஆசிரியர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சம்பவத்தில் அல்வாய் கிழக்கு பெரியார் பகுதியைச் சேர்ந்த கேந்திரநாதன் ஜெயந்தினி வயது 55 என்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
