யாழில் கூலித் தொழிலாளி மீது கொடூர தாக்குதல்-வெளியான அதிர்ச்சி தகவல்

யாழில் பெண் பிள்ளையை கிண்டல் செய்ததாக பொய் கூறி கூலித் தொழிலாளி மீது கொடூர தாக்குதல்! யாழில் பெண் பிள்ளையை கிண்டல் செய்ததாக பொய் கூறி கூலித்தொழிலாளி மீது கொடூர தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

தாக்குதலுக்கு உள்ளானவர் பெண் பிள்ளை ஒருவரை கிண்டல் செய்ததாக கூறி, நோர்வேயில் இருந்து வந்தவரால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி தாக்குதல்தாரியின் வீட்டுக்கு வேலைக்கு சென்றபோது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன் பயங்கரமான கத்தி முனையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட நபர் கத்தியை வைப்பதற்கு மோட்டார் சைக்கிளில் ஒரு விசேட ஏற்பாடு செய்து அந்த கத்தியை கொண்டுதிரிந்து அச்சுறுத்தல் விடுப்பதாகவும் தெரியவருகிறது.

அந்த கூலித் தொழிலாளி மதுபோதையில் சில தினங்களுக்கு முன்னர், நோர்வேயில் இருந்து வந்தவருடன் முரண்பட்ட நிலையிலேயே அதற்கு பழிவாங்குவதற்காக பெண்ணை கிண்டல் செய்ததாக பொய் கூறி இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் சாதியப் பிரச்சினையே இதற்கு அடிப்படை காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் நோர்வேயில் இருந்து வந்தவருக்குமிடையே தொடர்புகள் காணப்படுவதாகவும், அவர் என்ன செய்தாலும் வல்வெட்டித்துறை பொலிஸார் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தெரியவருகிறது.







قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post