பீகாரின் கிஷன்கஞ்சில் அரசு பள்ளி ஆசிரியர் தனது காதலியான மாணவியை குத்தி கொன்று, அவள் உடலை வெள்ளை பைகளில் அடைத்து மோட்டார்சைக்கிளில் ஏற்றி 270 கி.மீ. தொலைவு பயணித்து, பெகுசராய் மாவட்டத்தில் தூக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் அதிகரித்த பாதுகாப்பு இருந்தும், காவல்துறையின் சோதனை நிலையங்களை எதிர்கொள்ளாமல் நான்கு மாவட்டங்களைக் கடந்து சென்ற சம்பவம், நடைமுறை செயல்பாட்டில் பெரும் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. எங்கெங்கு சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை முன் கூட்டியே அறிந்து பிரதான சாலைகளை தவிர்த்து ஊர் வழியே செல்லும் சாலைகளிலேயே 270 கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்துள்ளார் கொலைகார ஆசிரியர். கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உறையாடல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கோபால் குமார் (35) என்பவர், தனது காதலியான பாரதி குமாரி (28)யை அக்டோபர் 13 அன்று கொலை செய்தார். பாரதி, பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர். போட்டி தேர்வுகளுக்காக பட்னாவில் தங்கி அங்கிருந்த பிரபல பயிற்சி மையத்தில் மாணவியாக தொடர்ந்து அவர், கோபாலுடன் நீண்ட கால உறவு கொண்டிருந்தார். விசாரணையில் கோபால் ஒப்புக்கொண்டபடி, பாரதி நானும் நீண்ட காலமாக காதலிக்கிறோம். கடந்த 13-ம் தேதி தனிமையில் இருந்த போது எதேர்ச்சையாக அவளுடைய செல்போனை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, முதன் முறையாக வேறொரு ஆணுடன் அவள் நெருக்கமாக இருந்த புகைப்படத்தைக் கண்டு கோபமடைந்து, வாக்குவாதம் செய்து, அது கை கலாப்பாக மாறவே அவளை குத்தி கொன்றதாக கூறுகிறார். கொலைக்குப் பின், சந்தேகத்தைத் தவிர்க்க பள்ளிக்குச் சென்று வகுப்பு நடத்தினார். இரவு நேரத்தில், பார்த்தியின் உடலை வெள்ளை பைக்குள் வைக்கு பழைய உடைகளால் மூடி, தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றி பெகுசராய் நோக்கி பயணித்தார்.கிஷன்கஞ்சிலிருந்து பெகுசராய் வரை சுமார் 270 கி.மீ. தொலைவு. இந்தப் பயணம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு காரணமாக பல்வேறு சோதனை நிலையங்கள், பாதுகாப்பு படைகள் இருந்தன. இருப்பினும், கோபால் யாருக்கும் பிடிக்கப்படாமல் நான்கு மாவட்டங்களைக் (கிஷன்கஞ்ச், பூர்னியா, கட்மண்டு, சமஸ்தீபூர்) கடந்து ஊர் வழியாகவே அக்டோபர் 14 அன்று அதிகாலை பெகுசராய் மாவட்டத்தின் மதிஹானி காவல் நிலைய வரம்புக்குட்பட்ட கோரம்பூர் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் உடலைத் தூக்கி விட்டு தப்பினார்.அக்டோபர் 15 அன்று, உள்ளூர் மக்கள் அந்த வயலில் பைகளில் அடைக்கப்பட்ட பெண் உடலை கண்டு காவலுக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், உடல் பாரதி குமாரி என்பவரது உடல் எனத் தெரியவந்தது. அவள் கடைசியாக அக்டோபர் 11 அன்று இரவு 8 மணிக்கு குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியிருந்தார். அக்டோபர் 13 முதல் அவள் போன் அணைக்கப்பட்டிருந்தது. அழைப்பு பதிவுகள் மற்றும் இருப்பிட தரவுகள், அவளை கோபாலுடன் கிஷன்கஞ்சில் இணைத்தன. அதன் அடிப்படையில், போலீஸ் நடத்திய தீவிர தேடுதலில், கோபால் அக்டோபர் 25 அன்று உத்தரப் பிரதேசத்தின் பிரயாகராஜில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கொலை, உடல் இயக்கம், அழித்தல் என அனைத்தையும் ஒப்புக்கொண்டார். காரா துல்லா, நவகச்சியா, லாகோ போன்ற டோல் பிளாசாக்களின் சிசிடிவி கேமராக்கள், பைக்கில் பைகளைப் பிணைத்து பயணம் செய்யும் கோபாலைப் பதிவு செய்திருந்தன. போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "கொலை கிஷன்கஞ்சில் நடந்தாலும், உடல் 270 கி.மீ. தொலைவில் பெகுசராயில் கண்டுபிடிக்கப்பட்டது. தேர்தல் கால பாதுகாப்பு இருந்தும், சோதனை நிலையங்கள் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கத் தவறியுள்ளன.இது காவல்துறையின் குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது" என்றனர். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடக்கிறது.இந்தக் கொலை, பீகாரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது. கோபாலுக்கு எதிராக கொலை, உடல் மாசுபாடு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
