ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாகும். இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மீண்டும் அந்த ராசிக்கு வருவதற்கு 18 ஆண்டுகள் ஆகும். கிரகங்களில் ராகு எப்போதும் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிப்பார். தற்போது இந்த ராகு சனி பகவானின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்த ராசியில் 2026 ஆம் ஆண்டு வரை இருப்பார். இதனால் இக்காலத்தில் ராகு மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அவ்வப்போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது ராகு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம். துலாம் துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் பல வழிகளில் சாதமாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். கலை, ஃபேஷன் டிசைனிங், ஹோட்டல் போன்ற துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். ஆடம்பரமான வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்களையும் பெறலாம். வேலை தேடுபவர்களுக்க புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணப்பிரச்சனைகள் எதுவும் இருக்காது. செல்வத்தில் நல்ல உயர்வு ஏற்படும். மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
கும்பம் கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் உள்ள பல வேலைகள் வெற்றிகரமாக முவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய ஆர்டர் அல்லது திட்டங்கள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.
தனுசு தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகத்தால் வெற்றிக் கதவுகள் திறக்கும். குறுகிய பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த நீண்ட கால பிரச்சனைகள் தீரும். தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். ஏதாவது ஒரு விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் தகவல் தொடர்பு திறன் மேம்படும். தொழிலில் கணிசமான உயர்வைக் காண்பீர்கள்.
