ஒமானில் குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் அடங்கிய குடும்பம் இறந்த நிலையில் மீட்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது: ஒமானின் அட்கியா பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் வீட்டின் உள்ளே இறந்து கிடந்த துயரமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இறந்தவர்கள் கணவன், மனைவி மற்றும் நான்கு குழந்தைகளைக் கொண்ட ஓமானி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தூக்கத்தில் இருக்கும் போது கார்பன் மோனாக்சைடை உள்ளிழுத்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வ ளைகுடாவில் குளிர்காலத்தில் கல்கரி அல்லது கரி எரித்து ஏற்படும் புகையாலும், ஏசியில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடை சுவாசித்து இந்திய தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலரும் இதுபோல் வளைகுடாவில் இறப்பது தொடர்கதை ஆகிறது. எச்சரிக்கையாக இருங்கள் மூடிய அறையில் இவைகளை எரியூட்டி தூங்காதீர்கள்.
