பொலன்னறுவை, அரலகங்வில, சிலுமனிசய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் மனைவி உயிரிழந்து, கணவன் பலத்த காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகளின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் தந்தை நேற்று (14) மதியம் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்தவர் வெலிகந்த கினிதமானவையில் வசிக்கும் சந்திரா போடி மெனிகே என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார். காட்டு யானை தாக்குதலில் காயமடைந்த கணவன் கீர்த்திவன்ச ஜெயமன்னே (60) பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
