உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகரில், தனது கணவன் கொலைக்கு அண்டைவாசிகளை தவறாக குற்றம் சாட்டிய ஒரு பெண், அவளது காதலனை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த காதலன் யாருன்னு தெரிஞ்சா காரி துப்புவீங்க. வாங்க என்ன சம்பவம் என பார்க்கலாம். முதலில் அண்டைவாசி குடும்பத்தினரை குற்றவாளிகளாகக் குறிப்பிட்ட ரீனாவின் பொய்யான புகாரால், அப்பாவி தந்தை-மகன் சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியானது பகீர் உண்மை. இது, அந்த குடும்ப உறுப்பினர்களை மட்டுமிள்ளமால் ஒட்டு மொத்த கிராமத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 11 அன்று, டிராக்டர் உரிமையாளரான தீரேந்திரா, தனது வீட்டில் தலையில் பலமான பொருளால்கடுமையாகதாக்கப்பட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது மனைவி ரீனா, உடனடியாக அலறி துடித்து, அண்டைவாசி கிர்த்தி யாதவ் மற்றும் அவரது மகன்கள் ரவி, ராஜு ஆகியோர் தான் கணவனை ஏதோ செய்தி கொலை செய்ததாகக் குற்றம் சாட்டினார். டிராக்டர் சரிசெய்யும் தகராறு காரணமாக இரண்டு குடும்பத்துக்கும் தகராறு இருந்தது. இதற்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததாக அவர் கூறினார். ரீனா, பொது இடத்தில் அழுது, அமைதியின்மை ஏற்படுத்தி, ஒரு அரசியல் கட்சியை இணைத்து போராட்டம் நடத்தினார். இதனால், காடம்பூர் பகுதியிலுள்ள கிராமத்தில் பெரும் அதிருப்தி பரவியது. கிராமம மக்களும் பக்கத்துக்கு வீட்டுக்காரர் தான் கொலை செய்திருப்பார் என்று நம்ப தொடங்கினார்கள். இதனால், உள்ளூர் மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் அழுத்தத்தால், காவல்துறைகிர்த்தியாதவ் குடும்பத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, கிர்த்தி மற்றும் ரவியை கைது செய்தது. ஆனால், காவல்துறை அதிகாரிகள் ரீனாவின் பேச்சில் சந்தேகம் கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. விசாரனையின் போது வீட்டுக்குள் இரத்தக்கறைகள் காணப்பட்டன. ஆனால், கணவர்தீரேந்திரா இறந்து கிடந்தது வெளியே.ரீனாவின் வாக்குமூலத்தின் படி வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்ததீரேந்திராவை கிர்த்தி யாதவ் கொலை செய்து விட்டார் என்றால்.. எப்படி வீட்டுன் உள்ளே இரத்தக்கரை வந்தது. மேலும், வீட்டின் உள்ளே இருந்த பலகைகளில் இரத்தக்கரை காணப்பட்டது. அது இறந்துதீரேந்திராவின்இரத்தத்துடன் பொருந்தியது. முன்னதாக மோப்ப நாய் பிரிவு வீட்டு முற்றத்திலேயே நின்றது, குற்றம் நடந்த இடம் வெளியே அல்ல, உள்ளே தான் என்பதை சுட்டிக்காட்டியது. மேலும், ரீனாவின் மொபைல் போனில், கொலை நடந்த இரவில் அவள் தனது மருமகன் சத்யம் உடன் 40 தடவை பேசியிருந்தது வெளிப்பட்டது. அவளுடன் உறவு கொண்டிருந்த சத்யத்தை காவல்துறை கைது செய்து விசாரிக்கையில், அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். சத்யம் தெரிவித்தபடி, அந்த இரவில் ரீனா தனது கணவரை மயக்க மருந்து கொடுத்து தூங்க வைத்து, தன்னை அழைத்தாள். அவன் மறுத்தாலும், ரீனா படுக்கைப் பலகையால் தீரேந்திராவின் தலையில் பலமுறை தாக்கி கொன்றாள். இருவரும் இரத்தத்தை சுத்தம் செய்தோம். அதன் பிறகு, தீரேந்திராவை கொலை செய்த மகிழ்ச்சியில் அவரது சடலத்தின் முன்பே உல்லாசமாக இருக்க என்னை கட்டாயப்படுத்தினாள் ரீனா. இருவரும் உறவு கொண்டோம். அதன் பிறகு, ரீனா குளித்துவிட்டு குழந்தைகளுடன் மாடியில் சென்று தூங்கினாள். அடுத்த நாள் காலை, கணவரின் உடலை வெளியே வைத்து அண்டைவாசிகளை குற்றம் சாட்டினாள். காவல்துறை தெரிவித்தபடி, முன்னதாக ரீனா தன்னுடைய மருமகன் சத்யத்துடன் கள்ளக்காதலில் இருந்ததால், அதற்கு தடையாக இருந்த தனது கணவரை தீர்த்து கட்ட இந்த கொலைத் திட்டத்தை அவள் தீட்டியிருந்தாள். கொலை ஆயுதமும், நீதித்துறை சான்றுகளும் அவளது ஈடுபாட்டை உறுதிப்படுத்தின. இப்போது ரீனா மற்றும் சத்யம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் கைது செய்யப்பட்ட அப்பாவி கிர்த்தி மற்றும் ரவி இருவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம், பொய் புகார்களின் ஆபத்தையும், விசாரணையின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை, காவல் துறை இந்த புகாரை மேற்கொண்டு விசாரிக்காமல் இருந்திருந்தால் அந்த இரண்டு அப்பாவிகளின் நிலைமையை யோசித்து பாருங்கள். ஒரு பக்கம் தன்னுடைய மருமகனையே தனக்கு கள்ள புருஷனாக வைத்துக்கொண்டு உல்லாச கூத்தடிக்கும் குற்றவாளி.. மறுபக்கம் எந்த குற்றமும் செய்யாமல் சிறையில் கொசுக்கடி, தடியடி, ஓரினச்சேர்க்கை தொந்தரவு என தூக்கம் தொலைத்த நிரபராதிகள்.. என நாட்கள் நகர்ந்திருக்கும். நினைத்து பார்த்தாலே பகீர் என்று இருக்கிறது.
