ஹிங்குறக்கொடை – மெதிரிகிரிய பிரதான வீதியின் தொற ஹதற பகுதியில் அமைந்த வளைவொன்றில், மழையுடன் கூடிய வானிலையை அடுத்து, சாரதி கவனயீனமாக ஓட்டிய லொறி வீதியை விட்டு விலகி எதிரே வந்த இராணுவத்திற்கு சொந்தமான மற்றொரு லொறியுடன் மோதி, சாலைதாண்டி கவிழ்ந்ததால் இன்று (13) மதியம் 12.00 மணியளவில் விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் கடுமையாக காயமடைந்து பொலனறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


