தம்புள்ளையைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் உயிரியல் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதவிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். மாணவி நேற்று (09.11.2025) இரவு தனது அறையில் படித்துக் கொண்டிருந்தபோது, காலையில் எழும்பாததால் பதற்றமடைந்த பொற்றோர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது மாணவி அறையில் மயக்க நிலையில் கண்ட பெற்றோர், உடனடியாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, மாணவியை பரிசோதித்த வைத்தியர்கள், வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பெற்றோர் ஒன்றும் அறியாத நிலையில் பெரும் பதற்றத்தில் வைத்தியசாலையில் அழுது புலம்பி வைத்தியசாலையில் இருந்தவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர். பின்னர் தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகள் குழு மாணவியின் வீட்டிற்குச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
