திவுலபிட்டிய, தூனகஹ - கொடிகமுவ வீதியில் அதிவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து விலகி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின் பகுதியில் இருந்து பயணித்தவரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் சுமார் 24 மற்றும் 25 வயதை உடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் படல்கம, இஹல மடன்பெல்ல பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
