யாழில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிவானந்தன் துவாரகன் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 7ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
