சம்மாந்துறையிலிருந்து திருகோணமலை நோக்கி சுமார் 25க்கு மேற்பட்ட பயணிகளுடன் பயணித்த பஸ் மஹிந்தபுர சந்தியில் இன்று (25) காலை 7:00 மணியளவில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் பேருந்து குடைசாய்ந்ததுடன் பஸ்ஸில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் சேருநுவர வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
