வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் இன்று (2) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
