பிட்டு அவித்து தர சொன்ன கணவன்-கத்தியாலே சம்பவம் செய்த மனைவி-மட்டு நகரில் அதிர்ச்சி..!

 

பிட்டு அவித்து தரச் சொன்ன கணவனை கத்தியால் வெட்டிக் கொலை செய்த  மனைவி - மட்டக்களப்பு வாகனேரியில் சம்பவம்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் வாகனேரியில்  குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளத சம்பவம்  இன்று (15) வாகனேரி  குடாமுனைகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மனைவியின் தாக்குதலால் உயிரிழந்தவர் 46 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என தெரிவிக்கப்படுகிறது 

கணவனை கொலை செய்த பின் மனைவி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் வயல் காவல் கடமையில் ஈடுபடுபவர் என்றும் இன்றைய தினம் வயலுக்குச் சென்று வீடு திரும்பியதும் மனைவியிடம்  பிட்டு அவித்துத் தருமாறு கூறிய நிலையில் மனைவி முடியாது எனக் கூற இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்ப்பட்ட நிலையில் பின் கைகலப்பாக மாற கணவனை மனைவி கத்தியால் தாக்கிய நிலையில் கணவன் உயிரிழந்துள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குறித்த வாகனேரி பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவது வழமையாகவுள்ளது.

கடந்த வருடமும் மனைவியை கொலை செய்து விட்டு சிறைக்குச்சென்றவர் சிறையிலிலிருந்து வந்து மாமியாரைக்கொலை செய்து விட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சம்பவம் இப்பிரதேசத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post