இடியுடன் இன்று பலத்த சம்பவம் செய்ய போகும் கார்மேக கறுப்பி-சற்று வெளியான முக்கிய அறிவிப்பு..!

 வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்ய கூடும்.

மேற்கண்ட பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்

பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு நாட்டின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Heavy Rain With Massive Thunder And Lightning

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சப்ரகமுவ , மேற்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.