துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்! துருக்கி சென்ற விமானம் கட்டுநாயக்கவில் பாதுகாப்பாகத் தரையிறக்கம்! தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் திரும்பி வந்த துருக்கி செல்லும் விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 202 பயணிகளுடன் துருக்கி நோக்கிப் புறப்பட்ட குறித்த விமானத்தில், பயணத்தின் போது திடீரெனத் தொழில்நுட்பக் கோளாறு அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து, விமானம் உடனடியாகத் திருப்பப்பட்டு, அவசரகால ஏற்பாடுகளுக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.