இலங்கையில், இன்றையதினம்(29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டில் கடந்த வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்த காரணத்தினால் இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்து செல்கிறது. அதன்படி, இன்றையதினம்(29) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 370,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 342,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
