தேசிய எரிபொருள் தேவையை நிறைவு செய்யும் வகையில் முறையான திட்டமிடல் மற்றும் இறக்குமதிகள் ஊடாக எரிபொருள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் களஞ்சிய வசதிக்கு ஏற்ப 20 முதல் 30 நாட்களுக்குத் தேவையான இருப்பு பராமரிக்கப்படுவதுடன், அதிதீவிர வானிலை காரணமாக எரிபொருள் இருப்புகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.மேலும், ஜனவரி மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் விலை திருத்தங்கள் தொடர்ச்சியான செயல்முறையாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
