சம்பூர் வீரமாநகரில் பெண்ணொருவரை பலாத்காரம் செய்த 4 பேர் கைது
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவருகிறது.
டிக்டொக் மூலம் ஒரு இளைஞர் குறித்த பெண்ணிடம் தொடர்பாகி சந்தித்துள்ளார்.இதன் பின்னர் குறித்த இடத்திற்கு ஏனைய நண்பர்கள் வந்த பின்னர் பலாத்காரம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
