நோயாளியுடன் உடலுறவில் ஈடுபட்ட மருத்துவ தாதி-உறவின் போதே பிரிந்த உயிர்..!

 

வ்ரெக்ஸ்ஹாம் (வேல்ஸ்) : பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள வ்ரெக்ஸ்ஹாம் மேலோர் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் ஒருவர், தனது நோயாளியுடன் ரகசிய உறவில் ஈடுபட்டது தெரியவந்ததைத் தொடர்ந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த உறவின் போது நோயாளி உயிரிழந்த சம்பவம், செவிலியர் பெனலோப் வில்லியம்ஸ் (வயது 42) மீது கடும் நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது. 


ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், சிறுநீரக பாதிப்பால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் (பேஷண்ட் ஏ என்று அழைக்கப்படுபவர்), சிகிச்சை முடிந்து மருத்துவமனை கார் பார்க்கிங்கில் தனது காரின் பின் சீட்டில் செவிலியருடன் உடலுறவில் ஈடுபட்ட போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


இறப்புக்கான காரணம் "மாரடைப்பு மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்" என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று, செவிலியர் வில்லியம்ஸ் ஆம்புலன்ஸை அழைக்காமல், தனது சக ஊழியர் ஒருவரை மட்டும் உதவிக்கு அழைத்தார். 


அந்த ஊழியர் வந்த போது நோயாளி ஓரளவு ஆடை களைந்த நிலையில் பதில் அளிக்காத நிலையில் இருந்தார்.


அவர் தான் உடனடியாக 999 அழைத்து ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தார். முதலில் போலீசாரிடம் வில்லியம்ஸ், "நோயாளி உடல்நலம் பாதிக்கப்பட்டதாக செய்தி அனுப்பியதால் சென்று பார்த்தேன். காரில் 30-45 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது" என்று கூறினார்.


ஆனால் பின்னர் செவிலியர் வில்லியம்ஸிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வினோத காரணங்களை கூறினார், அவர் வாக்குமூலத்தின் படி, நான் சுமார் ஒரு ஆண்டாக நோயாளியுடன் நெருக்கமான உறவில் இருக்கிறேன். அவருக்கு உறவினர்கள், வாழ்க்கைத்துணை, குடும்பம் என எதுவும் இல்லை.


அவருடைய தனிமையே அவருக்கு மிகப்பெரிய நோயாக இருந்தது. அவருடைய தனிமையை போக்க நான் அவருடன் இருந்தேன். ஆனால், எதிர்பார்க்காத விதமாக அவர் உயிரிழந்தாய் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நோயாளியுடன் உறவில் இருந்ததை நான் நியாயப்படுத்தவும் விரும்பவில்லை. 


நிர்வாகம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு நான் ஒத்துழைக்கிறேன் என கூறினார்.

மேலும், இந்த உறவு சக ஊழியர்களுக்கு தெரிந்திருந்த போதிலும், அவர்களின் எச்சரிக்கையை புறக்கணித்ததாகவும் தெரியவந்தது.


இதனைத் தொடர்ந்து, பெட்சி காட்வாலாடர் பல்கலைக்கழக சுகாதார வாரியம் வில்லியம்ஸை உடனடியாக பணிநீக்கம் செய்தது. பின்னர் நர்சிங் அண்ட் மிட்வைஃபரி கவுன்சில் (NMC) நடத்திய விசாரணையில், தொழில்முறை தவறு மற்றும் பொதுமக்கள் நம்பிக்கையை சீர்குலைத்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் செவிலியர் பதிவிலிருந்து (struck off) நீக்கப்பட்டார்.


NMC குழு கூறியதாவது: 


"வில்லியம்ஸின் செயல்கள் செவிலியர் தொழிலின் தரத்திலிருந்து கடுமையாக விலகியுள்ளன. இது தொழிலின் நற்பெயரை களங்கப்படுத்தியுள்ளது." இந்த சம்பவம் செவிலியர்-நோயாளி உறவில் தெளிவான எல்லைகளை பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது.


சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இதனால் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Summary in English : A nurse in Wrexham, Wales, Penelope Williams, was struck off the register after her year-long secret illegal affair with a dialysis patient ended tragically. In January 2022, the patient died of heart failure during a late-night car park liaison; she failed to call an ambulance promptly and initially lied about the relationship.

 

கருத்துரையிடுக

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.