மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கத்தின் விலை... இன்று சவரன் எவ்வளவு?

 


ஆபரணத் தங்கத்தின் விலை சமீபத்தில் சற்று குறைந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது பாமர மக்களிடையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சில தினங்களாக குறைந்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 260 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ 12,000 ஆகவும் சவரன், ரூ.96,000 ஆகவும் இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, 12,030 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 240 அதிகரித்து, 96,20 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. இதே போன்று வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.208.00ஆகவும், கிலோவிற்கு ரூ.2,08,000 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றது இலங்கையிலும் ஆபரணத்தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,66,640, அதுவே கிராமிற்கு ரூ.45,830க்கு விற்கப்படுகின்றது. மேலும் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 3,36,160க்கும் ஒரு கிராமிற்கு ரூ. 42,020க்கு விற்கப்படுகின்றது. இலங்கையில் வெள்ளியின் விலை ஒரு கிராமிக்கு 581.69 LKR என்றும் ஒரு அவுன்ஸ 18,092.62 LKR என்று விற்பனை ஆகின்றது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post