எதிர்பார்த்தது போன்று காற்று சுழற்சிக்கு செல்லும் வெப்ப நீராவி நிறைந்த கிழக்கு காற்றும், வட இந்திய குளிர்காற்றும் ஒருங்கே யாழ் மாவட்டத்தின் நேரே காற்று குவிதலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதனால் கிழக்கு காற்றலையுடன் குளிரலையும் இணைந்து யாழ் மற்றும் வன்னியில் கனமழையாக பொழியக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இதன் விளைவாக, தற்போது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் கிடைத்துவரும் மழைவீழ்ச்சி அடுத்த சில மணிநேரங்கள் தொடரக்கூடும். மீண்டும் மீண்டும் சொல்லக்கூடியது, வன்னி மற்றும் யாழ்ப்பாணத்தில் குளங்களை அண்டிய தாழ்வான நிலங்களில் வாழும் மக்கள் தயவுசெய்து மிக அவதானமாக செயற்படவும்.!!
