வடமராட்சி தாளையடிக் கடலுக்குள் நீராடிய நிலையில் காணாமல் போன இளைஞன் யாழ். வடமராட்சி கிழக்குத் தாளையடிக் கடலில் ஞாயிற்றுக்கிழமை (28.12.2025) நீராடிய இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி காணாமற் போயுள்ளார். உடுத்துறையைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு காணமல் போயுள்ளார். காணாமல் போனவரைத் தேடித் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
