அடுத்தடுத்து 12 தடவை குலுங்கிய பூமி-வீதிகளுக்கு ஓடி வந்து அச்சத்தில் உறங்காமல் தவித்த மக்கள்

 

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ராஜ்காட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மண்டலத்தில் நேற்றிரவில் இருந்து இன்று (ஜன 09) நண்பகல் வரை 12 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ்காட் மாவட்டத்தில் உள்ள மக்கள் பீதியில் உறைந்து இரவு முழுவதும் உறங்காமல் தவித்துள்ளனர். பெரும்பாலோனோர் என்ன செய்வது என்று தெரியாமல் வீடுகளை விட்டு திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர். உப்லேட்டா, தோராஜி மற்றும் ஜேட்புர் தாலுகாக்களில் மட்டும் 21 முறை நில அதிர்வு பதிவாகி உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஓம் பிரகாஷ் கூறி உள்ளார்.


இந்த நில நடுக்கங்கள் அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 1.4ல் இருந்து 3.8 வரை பதிவாகி உள்ளது. குறிப்பாக, உப்லேட்டா பகுதியில் மட்டும் 12 முறை ரிக்டர் அளவுகோலில் குறைந்தபட்சம் 2.6 முதல் அதிகபட்சமாக 3.8 ஆக நிலநடுக்கங்கள் பதிவானது. முதல் முறையாக நில அதிர்வானது ரிக்டரில் 3.3 ஆக இருந்தது. தொடர்ந்து நிலநடுக்கங்கள் பதிவானாலும் எங்கும் உயிரிழப்புகளோ, பொருள் இழப்புகளோ ஏற்படவில்லை. 


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post