தம்புள்ளையில் கிறிக்கெட் போட்டியை பார்க்கப் போய் திரும்பியோர் பயணித்த வேன் விபத்து 5 பேருக்கு காயம் மிஹிந்தலை பகுதியில் உள்ள A9 வீதியில் இன்று (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். தம்புள்ளை மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைக் காண வந்து, வானில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று இந்த விபத்தில் சிக்கியுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மிஹிந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

