செங்கல்பட்டு தாலுகா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த இவர் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுவயதிலேயே நெருங்கி பழகியுள்ளார். அந்த வாலிபர் சிறுமியை தவறான கண்ணோட்டத்தோடு பார்த்து வந்துள்ளார்.
யாருக்கும் தெரியாமல் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுபோன்ற நேரங்களில் வாலிபர் 15 வயது சிறுமியிடம் காதல் வசனங்களை பேசி அவரது மனதை மாற்றியுள்ளார்.நாம் இருவரும் தான் சேர்ந்து வாழ போகிறோமே? எனவே திருமணத்திற்கு முன்னரே நாம் ஒன்றாக இருப்பதில் எந்த தவறும் இல்லை எனக்கூறி அந்த வாலிபர் சிறுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி எதுவுமே தெரியாத நிலையில் எப்போதும் போல சிறுமி பாடசாலைக்கும் சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போதுதான் சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. சிறுமி கர்ப்பமாகி 10 வாரங்கள் ஆகி இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு சிறுமியின் தாய் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுபற்றி குடும்பத்தினர் சிலருக்கும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் மேலும் வெளியில் தெரிந்து விட்டால் நமது குடும்பத்துக்கு அசிங்கமாகிவிடும் என்று சிறுமியின் உறவினர்கள் கருதி உள்ளனர்.
இதனால் வீட்டில் வைத்தே சிறுமியின் கருவை கலைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதில் சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பயந்து போன உறவினர்கள் சிறுமியை செங்கல்பட்டு அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் வைத்தியர்கள் அதிக அளவில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதால் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் 15 வயது சிறுமியான மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே சிறுமியின் உடலில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
.jpeg)