அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகை குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குறித்த கொடுப்பனவானது கணக்கிடப்பட்ட எண்ணிக்கையில் 73 சதவீதமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபாய் கொடுப்பனவும் இந்நாட்களில் வழங்கப்படுகின்றதாக அந்தப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களிலிருந்து 186,893 மாணவர்கள் 15,000 ரூபா உதவித்தொகையைப் பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் 136,994 மாணவர்கள் இதுவரை அந்த உதவித்தொகையைப் பெற்றுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.
