இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் மாத்திரம் 581 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் நிலவிய மழையுடனான வானிலையால் டெங்கு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையிலேயே, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
